கோலாலம்பூரில் இருந்து போலி கடவுச்சீட்டு மூலம் சென்னை வந்த 3 பேர் அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
கடலூரை சேர்ந்த சரவணன் (34), ராஜேஷ் குமார் (20), திருச்சியை சேர்ந்த தீர்த்தகிரி (26) ஆகியோர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கோலாலம்பூருக்கு வேலைக்கு சென்றனர்.
அங்கு அவர்களுக்கு சொன்னபடி ஊதியம் கொடுக்கவில்லை. இதனால் அவர்கள் தாயகம் திரும்ப முடிவு செய்தனர். இதனால் தங்களது கடவுச் சீட்டுகளை வேலை செய்யும் நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் கடவுச் சீட்டை கொடுக்க மறுத்து விட்டனர்.
இதைத் தொடர்ந்து போலி கடவுச் சீட்டில் மூன்று பேரும் சிறிலங்கா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்களை விமான நிலைய காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.