Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இ‌‌ந்‌தியா து‌ண்டு, து‌ண்டாக போகாம‌ல் இரு‌‌ப்பத‌ற்கு‌ள் ம‌த்‌திய அரசு ‌தீ‌ர்வு: சரத்குமார்!

இ‌‌ந்‌தியா து‌ண்டு, து‌ண்டாக போகாம‌ல் இரு‌‌ப்பத‌ற்கு‌ள் ம‌த்‌திய அரசு ‌தீ‌ர்வு: சரத்குமார்!
, சனி, 5 ஏப்ரல் 2008 (12:59 IST)
"ஒகேன‌க்க‌ல் ‌பிர‌ச்சனை‌யி‌லமுழுமையாக கவனம் செலுத்தி ஒருங்கிணைந்த இந்தியா துண்டு, துண்டாக போகாமல் இருப்பதற்கு மத்திய அரசு உடனடியாக கவனம் செலுத்தி தீர்த்துவைக்கவேண்டும்'' என்று நடிகர் சங்க தலைவர் சரத்குமார் கூ‌றினா‌ர்.

செ‌ன்னை‌யி‌லநே‌ற்றநட‌ந்உ‌ண்ணா‌விர‌த்‌தி‌லதென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார் பேசுகை‌யி‌ல், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் பற்றி இங்கு சிறப்பாக எடுத்துக்கூறினார்கள். எதற்காக இந்த போராட்டம் ஏன் கொம்பு சீவி விடப்பட்டு உள்ளது என்பது குறித்தும் இங்கு சிறப்பாக பலரும் எடுத்து கூறினார்கள்.

நம் வீட்டு தண்ணீரை குடிப்பதற்கு யாரை கேட்கவேண்டும் என்று ச‌ந்‌திரசேக‌ரகேட்டது முற்றிலும் உண்மை. அதுதான் இன்றைய நிலைமை. அது மட்டும் அல்லாமல் சகோதரர் சத்யராஜ் சொன்னது, ஒரு தமிழனின் உணர்வு. யாரும் அவரை தவராக புரிந்துகொள்ளவேண்டாம்.

யார் பேசினாலும் சகோதரர் கமலஹாசன் சொன்னதுபோல் இரு தரப்பினருக்கும் நாம் பாலமாக இருக்கவேண்டுமே தவிர பிரச்சினைகளை மீண்டும் எண்ணை ஊற்றி பற்றவைக்கும் அளவுக்கு நமது கலைக்குடும்பம் இருக்கக்கூடாது என்பதுதான் என் கருத்தும். ஆனால் அதே சமயத்தில் நாம் ஒவ்வொரு முறையும் சீசன் பிரச்சினை என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.

சிறப்பான முறையில் மழை பெய்தால் இங்கு உள்ள அரசியல்வாதிகளும் சரி, கர்நாடகாவில் உள்ள அரசியல்வாதிகளும் சரி, காவிரி பிரச்சினை குறித்து பேசுவது இல்லை. மழை நன்றாக பெய்துவிட்டால் அந்த பிரச்சினை இல்லை. ஆனால் மழை பெய்யாவிட்டால் காவிரி பிரச்சினை தலை தூக்கிவிடுகிறது.

காவிரி பிரச்சினை இன்று நேற்று நடக்கும் பிரச்சினை இல்லை. 1924-ம் ஆண்டு முதல் காவிரி பிரச்சினை குறித்து பேசி இதுவரை எந்த முடிவும் வராத சூழ்நிலைதான் உள்ளது. இந்த பிரச்சினைக்கு முடிவு காணவேண்டும் என்றால் மாநில அரசால் மட்டும் முடியாது. இதில் மத்திய அரசு முழுமையாக கவனம் செலுத்தி ஒருங்கிணைந்த இந்தியா துண்டு, துண்டாக போகாமல் இருப்பதற்கு மத்திய அரசு உடனடியாக கவனம் செலுத்தி தீர்த்துவைக்கவேண்டும்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி கர்நாடகம் நடந்துகொண்டு இருக்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி செயல்படும் கர்நாடக அரசை மத்திய அரச பார்த்துக்கொண்டு இருக்கிறது. `நான் அரசியல் பேச விரும்பவில்லை' என்று எனது அன்பு சகோதரர் விஜயகாந்த் சொல்லிவிட்டுச் சென்று இருக்கலாம். ஆனால் சொல்லவேண்டிய கருத்துக்களை ஆழமாக சொல்லியாக வேண்டும். அதுபற்றிதான் சத்யராஜ் உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்தவற்றை பேசினார். நாம் இனிமேல் மனிதனாக இருக்கவேண்டும் என்றால் தமிழனாக இருக்கவேண்டும் என்று சொல்லி இருக்கிறார். இதில் எந்த ஒரு தவறும் இல்லை.

ந‌திகளை இணை‌க்க ரூ.100 கோடி தர‌த் தயா‌ர்!

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் 10 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசால் ஒத்துக்கொள்ளப்பட்ட திட்டம் ஆகும். இந்த திட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார். அப்போது எங்கு சென்றார் இந்த எடியூரப்பா. கர்நாடகா மாநிலத்தில் சட்ட சபை தேர்தல் வருகிறது என்றதும் இதை மனதில் வைத்துக்கொண்டு இன்று பிரச்சினை செய்கிறார்கள். இதில் அநியாயமாக பாதிக்கப்படுபவர்கள் தமிழர்கள்.

இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வு, நதிகளை தேசியமயமாக்குவதுதான். இதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாக ஏற்கனவே அறிவித்தார். திரையுலகம் சார்பில் நாங்கள் எல்லோரும் சேர்ந்து ரூ.100 கோடி தர தயாராக இருக்கிறோம் எ‌ன்றசர‌த்குமா‌ரகூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil