மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பிரகாஷ் காரத்திற்கு முதலமைச்சர் கருணாநிதி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலராக அருமை நண்பர் தோழர் பிரகாஷ் காரத் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
தோழர் பிரகாஷ் காரத் மார்க்சிய சித்தாந்தங்களை முழுமையாகக் கற்றறிந்த தேர்ச்சியும், செழுமையாக பயிற்சியும் பெற்றிருப்பவர்.
உழைக்கும் வர்க்கத்தின் உயர்விற்காக ஓயாது பாடுபடுபவர். அவரின் பணி மென்மேலும் சிறந்திடவும், அதன் மூலம் பாட்டாளி வகுப்பினர் தொடர்ந்து நல்ல பயன் பெற்றிடவும் வாழ்த்துகிறேன். மற்றும் பல்வேறு பொறுப்புகளுக்குப் புதிதாகவும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்துத் தோழர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
இவ்வாறு முதலமைச்சர் கருணாநிதி தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.