Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பா.ம.க ஆ‌ட்‌சி‌க்கு வ‌‌‌ந்து மதுவை ஒ‌ழி‌க்க‌‌ட்டு‌ம்: கருணாநிதி!

பா.ம.க ஆ‌ட்‌சி‌க்கு வ‌‌‌ந்து மதுவை ஒ‌ழி‌க்க‌‌ட்டு‌ம்: கருணாநிதி!
, திங்கள், 31 மார்ச் 2008 (12:43 IST)
ா.ம.க. ஆ‌ட்‌சி‌‌க்கவ‌ந்தக‌ள்ளு‌க்கடை, ‌பிரா‌ந்‌தி‌க் கடைகளஒ‌ழி‌க்க‌‌ட்டு‌ம். எ‌ல்லா‌பபெருமையு‌மஅவ‌‌ர்களையசேர‌‌ட்டு‌மஎ‌ன்றமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

இதகு‌றி‌த்தமுதலமைச்சர் கருணாநிதி இ‌ன்றவெளியிட்டுள்ள கேள்வி-பதில் அ‌றி‌க்கை:

தி.மு.க. அமைச்சர்கள், சரித்திரம் தெரியாமல் பேசுகிறார்கள் என்று ஒருதலைவர் கூறியிருக்கிறாரே?

தி.மு.க. அமைச்சர்களுக்கு மட்டுமல்ல, தி.மு.க.வின் சாதாரண உறுப்பினருக்கும் சரித்திரம் மிகத் தெளிவாகவே தெரியும்.

2011-ல் பா.ம.க. தலைமையிலான ஆட்சி அமையும் என்றும் அந்த ஆட்சியின் முதலமைச்சர் போடுகின்ற முதல் கையெழுத்து மது விலக்கு கொண்டு வரும் ஆணையாகத் தான் இருக்குமென்றும் பா.ம.க. தலைவர் கூறியுள்ளதைப் பற்றி?

அந்த வாய்ப்பு அவருக்கு வர வேண்டுமென்பதற்காகத்தான், நாங்கள் மது விலக்கு பற்றி அவர் பேசுவதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அவர்களே ஆட்சிக்கு வந்து கள்ளுக்கடை, பிராந்திக் கடைகளை ஒழிக்கட்டும். கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்களைப்பிடித்து எண்ணைக் கொப்பரையில் போட்டுத் தண்டிக்கட்டும். எல்லாப் பெருமையும் அவர்களையே சேரட்டும்.

சொல்வதசுலப‌ம், ச‌ெ‌ய்வதகடின‌ம்!

அண்மையில் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு வழங்கும் நிவாரணத் தொகையை ஏக்கருக்கு ரூ. 7 ஆயிரமாக உயர்த்தித் தர வேண்டுமென்று தமிழகக் காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சொல்லியிருக்கிறாரே?

மத்திய அரசினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள வழி காட்டுத‌ல்படி பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.4 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டு வந்தது. அதாவது ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1,600 வீதம் தான் வழங்க வேண்டுமென்று மத்திய அர‌சி‌னவழிகாட்டி நெறி முறைகளே கூறுகின்றது. இந்தத் தொகையைத் தான் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.7 ஆயிரம் வீதம் வழங்க வேண்டுமென்று தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர் பே‌சியிருக்கிறார்.

த‌மிழகா‌ங்‌கிர‌ஸதலைவ‌ர், பிரதமரிடமும், சோனியா காந்தியிடமும் வலியுறுத்தி தொகையைப் பெற்றுத் தந்தால் அவர் தெரிவித்த ஆலோசனையை சுலபமாக நிறைவேற்றிட இயலும். சொல்வது சுலபம், செய்வது கடினம்.

ஒரு மரு‌த்துவ‌ர் சொ‌ல்ல‌க் கூடாது!

மத்திய பட் ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள 60 ஆயிரம் கோடி ரூபாய் பயிர்க்கடன் ரத்து. மயக்கமடைந்த விவசாயிக்கு முகத்தில் தெளிக்கும் தண்ணீரைப் போன்றதென்றும், இதனால் எந்தப் பலனும் இல்லை என்றும் பா.ம.க. நிறுவனத் தலைவர் மரு‌த்துவ‌ரராமதாஸ் சொல்லியிருக்கிறாரே?

மயக்கம் அடைந்தவன் முகத்தில் தண்ணீரைத்தெளித்து அவனை எழுப்புவது தான் முதல் கடமையாகும். அந்தக் கடமையை நிறைவேற்றிய மத்திய அரசைப் பாராட்டுவது தான் மனிதநேயப் பண்ணாடு. அதனால் எந்தப் பலனும் இல்லை என்று ஒரமரு‌‌த்துவ‌ர் சொல்லக்கூடாது எ‌ன்றமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil