தேசிய சிறு சேமிப்பு ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ரகுமான் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த பதவியில் ஏற்கனவே இருந்த விஜய டி.ராஜேந்தர், இலங்கை தமிழர் பிரச்சனையில் சுதந்திரமாக கருத்து தெரிவிக்க முடியவில்லை என்றும், அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடாது என்றும் கருதுவதாக கூறி தனது பதவியை கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில், தேசிய சிறு சேமிப்பு ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவராக ரகுமான் கானை முதலமைச்சர் கருணாநிதி இன்று நியமித்துள்ளார் என்று அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.