பொதுத் தொலைபேசிகளில் பேசுவதற்கு ஸ்மார்ட் கார்டு திட்டம் விரைவில் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதற்கான பொதுத் தொலைபேசி கருவிகளை பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக ஸ்மார்ட் கார்டுகள் குறிப்பிட்ட தொகைகளில் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த போனில் தேய்த்து விட்டுப் பேசலாம்.
ஸ்மார்ட் கார்டை தேய்க்கும் வசதி கொண்ட இந்த தொலைபேசியை தனியார் நிறுவனம் வழங்க உள்ளது. இதில் ஸ்மார்ட் கார்டு மட்டுமின்றி நாணயங்களைப் போட்டும் பேசலாம். இதற்காக ஒரு ரூபாய் நாணயம் மட்டுமின்றி ரூ.2, ரூ.5 நாணயங்களையும் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 ரூபாய் நாணயத்தில் இரண்டு நிமிடமும், 5 ரூபாய் நாணயத்தில் ஐந்து நிமிடங்களும் பேசலாம்.