சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட தனியார் விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. கோளாறு உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் 140 பயணிகள் உயிர் தப்பினர்.
சென்னையில் இருந்து இன்று காலை 140 பயணிகளுடன் டெல்லி நோக்கி தனியார் விமானம் ஒன்று புறப்பட தயாரானது. அப்போது விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு என்ஜினில் தொழில் நுட்ப கோளாறு இருப்பதை விமானிகள் கண்டறிந்தனர்.
இதையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக இறக்கி விடப்பட்டனர். தொழில் நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதும் விமானம் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் பயணிகளின் டெல்லி பயணம் தாமதமானது. சில மணி நேர தாமதத்திற்குப் பின் பயணிகள் டெல்லி அனுப்பி வைக்கப்பட்டனர்.