Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓகேன‌‌க்க‌ல்‌லி‌ல் அ.இ.அ.‌தி.மு.க. நாளை ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: ஜெயல‌லிதா!

ஓகேன‌‌க்க‌ல்‌லி‌ல் அ.இ.அ.‌தி.மு.க. நாளை ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: ஜெயல‌லிதா!
, புதன், 26 மார்ச் 2008 (12:06 IST)
''ஓகேனக்கல்லில் உள்ள பகுதிகள் மீது தேவையில்லாமல் உரிமை கொண்டாடும் கன்னஅமைப்பினருக்கஎதிர்ப்பதெரிவித்து அ.இ.அ.ி.ு.சார்பிலநாளை கண்டஆர்ப்பாட்டமநடத்தப்படும்'' என்றஅக்கட்சியினபொதுசசெயலாளரஜெயலலிதஅறிவித்துள்ளார்.

இததொடர்பாக அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் ஜெயல‌லிதா இன்று வெளியிட்டுள்அறிக்கை‌யி‌ல், காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு போன்ற அண்டை மாநிலங்களுடனான நதிநீர் பிரச்சனைகளில் தமிழகத்தின் உரிமைகளை கருணாநிதி தட்டிக் கேட்காமல் விட்டுக் கொடுத்ததன் விளைவாக பல்வேறு புதுப்புது பிரச்சனைகளை அண்டை மாநிலங்கள் கையில் எடுத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டன.

தேசிய உணர்வு இல்லாத கன்னட அமைப்புகள்தான் இதுபோன்ற குறுகிய மனப்பான்மையுடன் தேவையில்லாமல் பிரச்சினைகளை உருவாக்குகின்றன என்றால் தேசியக் கட்சிகளும் இந்த விஷயத்தில் உண்மை நிலையை எடுத்துரைக்காமல் தமிழகத்திற்கு எதிரான நட வடிக்கைகளில் ஈடுபடுவது மிகுந்த வேதனையை அளிக்கிறது.

கர்நாடமாநிமுன்னாளமுதலமைச்சரஎடியூரப்பா, ஓகேனக்கலபகுதிக்கசென்றஎல்லைப்பிரச்சனகுறித்தஇரமாநிஅரசுகளுமசர்வசெய்பின்னரஓகேனக்கலகூட்டகுடிநீரதிட்டத்ததுவக்வேண்டுமஎன்அளவிலபேசிவிட்டசென்றிருக்கிறார்.

ஓகேனக்கல்லில் உள்ள பகுதிகள் மீது தேவையில்லாமல் உரிமை கொண்டாடும் கன்னட அமைப்பினருக்கும், கர்நாடக அரசியல் கட்சிக ளுக்கும் தகுந்த பதிலடி கொடுக்காமல் வாய்மூடி மவுனியாக இருக்கும் தி.மு.க. அரசை கண்டித்தும், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவான ஓகேனக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரியும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட கழகங்களின் சார்பில் நாளை (27ஆ‌ம் தே‌தி) காலை 10 மணி அளவில் ஓகேனக்கல்லில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil