தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டை விற்பனை செய்த 37 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள லாட்டரி டிக்கெட், 24 செல்பேசிகள், இரண்டு இரு சக்கர வாகனம், லேப்-டப், பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக திருச்சி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அசோக்குமாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவரது தலைமையில் காவல்துறையில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, செல்வராஜ் என்பவரை கைது செய்தனர். விசாரணையில், லாட்டரி டிக்கெட்டுகளை தயாரித்து கரூர் பகுதிகளில் சப்ளை செய்தது தெரியவந்தது.
இதேபோல், புதுக்கோட்டை மாவட்டம் இழுப்பூரில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இழுப்பூர் டவுன் பஞ்சாயத்து உறுப்பினர் மீரா மொகிதீன் (60), பழனி (45), ஷபியுல்லா (35), முகமது சகிரா (27), சின்னத்தம்பி (57) என்று தெரியவந்தது. இவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.