தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 1,500 ஏக்கர் நிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட பயிர்ச் சேதம் பற்றி விவசாய, வருவாய்த்துறை அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருவதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அனில் மேஷ்ராம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தங்களது பயிர்ச் சேதம் விபரம் பற்றி விவசாயத்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்குமாறு விவசாயிகளை வலியுறுத்தியுள்ளார்.
சேத விபரம் பற்றிய விரிவான அறிக்கை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு, இதற்கான நிதியை அரசு வெளியிட்டதும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.