திடீர் நெஞ்சுவலி காரணமாக திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கி.வீரமணிக்கு நேற்று மாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.