சென்னையில் உள்ள கொரியா தூதரகம் முன்பு இன்று தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய ஹூண்டாய் கார் தொழிற்சாலை ஊழியர்கள் 423 கைது செய்யப்பட்டனர்.
வர்த்தக சங்கங்களுக்கு அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஹூண்டாய் நிர்வாகம் நிறைவேற்றக்கோரி கொரியா தூதரகம் முன்பு ஹூண்டாய் நிறுவனத்தின் அனைத்து சங்கங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள், ஊழியர்கள் 423 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி வழங்காததால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.