Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நெ‌ல்லை மாவ‌ட்ட‌‌‌த்தி‌ல் வெ‌ள்ள சேத‌‌ங்களை மு.க.ஸ்டாலின் பா‌ர்வை‌யி‌ட்டா‌ர்!

நெ‌ல்லை மாவ‌ட்ட‌‌‌த்தி‌ல் வெ‌ள்ள சேத‌‌ங்களை மு.க.ஸ்டாலின் பா‌ர்வை‌யி‌ட்டா‌ர்!
, திங்கள், 24 மார்ச் 2008 (12:03 IST)
நெ‌ல்லை மாவ‌ட்ட‌த்‌தி‌ல் வெ‌ள்ள சேத‌ங்களை உ‌ள்ளா‌‌‌ட்‌சி‌த்துறை அமை‌ச்ச‌ர் மு.க‌.‌ஸ்டா‌லி‌ன் இ‌ன்று பா‌ர்வை‌யி‌ட்டு, ‌நிவாரண‌ம் ‌‌கிடை‌க்க உடனடி நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று கூ‌றினா‌ர்.

கட‌ந்த 2 வாரமாதெ‌னமாவட்டங்களில் பல‌த்மழை பெய்தது. இதனால் நெல், வாழை பயிர்கள் ‌நீ‌ரி‌லமூ‌ழ்‌‌கி சேதம் அடைந்தன. ஏராளமான வீடுகளு‌மவெள்ள‌த்‌தி‌லமூ‌‌ழ்‌கியது. கடுமையாபா‌தி‌ப்ப‌‌ட்டு‌ள்இ‌ந்பகு‌திகளஉள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட வந்தார். நே‌ற்றதூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ‌ஸ்‌ட‌ா‌லி‌னபார்வையிட்டார். அ‌ப்போது பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்கு ‌நிவாரஉத‌விகளவழ‌‌ங்‌கினா‌ர்.

இ‌ன்றநெல்லை மாவட்டத்தில் வெ‌ள்ள‌த்தா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்பகு‌திகளஅமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். கருங்காடு பகுதியில் வெள்ளத்தால் சேதமான நெற்பயிர்களை பார்வை‌யி‌ட்டா‌ர். அ‌ங்‌கிரு‌ந்விவசாயிகளிடம் குறைகளகேட்டறிந்தார்.

பி‌ன்ன‌ர் ‌வீடுகளஇழ‌ந்பொதம‌க்களு‌க்கஆறுத‌லகூ‌றினா‌ர். தொடர்ந்து கடையம், ஆழ்வார்குறிச்சி, பொட்டல்புதூர், ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, சேர்மாதேவி, கீழகருவேலன்குளம், நாங்குநேரி போன்ற பகுதி களையும் பார்வையிட்டார்.

வெள்ள சேதங்களை பார்வையிட வந்த அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஏராளமான மக்கள் நிவாரணம் கேட்டு மனு கொடுத்தனர். மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து உரிய நிவாரணம் கிடைக்க செய்வதாக அவர்களிடம் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

அமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் அமைச்சர்கள் மைதீன்கான், பூங்கோதை, நெல்லை மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரு‌ம் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பினருமான கருப்பசாமி பாண்டியன் உ‌ள்பட அ‌திகா‌ரிக‌ள் உட‌ன் செ‌ன்றன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil