தமிழ்நாட்டில் மெட்ரிகுலேஷன் 10-ம் வகுப்பு தேர்வு, ஓ.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது. இத்தேர்வை ஒரு லட்சத்து 16 ஆயிரம் மாணவ- மாணவிகள் எழுதுகிறார்கள்.
பிளஸ் 2 தேர்வு இன்று முடிகிறது!
தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு இன்று முடிவடைகிறது. மெட்ரிகுலேசன் 10-வது வகுப்பு தேர்வு, 10-வது வகுப்பு ஓ.எஸ்.எல்.சி.தேர்வு 10-வது வகுப்பு ஆங்கிலோ இந்தியன் தேர்வு ஆகியவை நாளை தொடங்குகின்றன.
மெட்ரிகுலேசன் தேர்வை ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 47 மாணவ- மாணவிகள் எழுதுகிறார்கள். அவர்களில் 58 ஆயிரத்து 427 பேர் மாணவர்கள். 47 ஆயிரத்து 622 பேர் மாணவிகள்.
ஆங்கிலோ இந்தியன் தேர்வை 4 ஆயிரத்து 595 மாணவ- மாணவிகள் எழுதுகிறார்கள். ஓ.எஸ:.எல்.சி. தேர்வை 1,500 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.
மெட்ரிகுலேசன் தேர்வு அட்டவணை !
மார்ச் 25ஆம் தேதி - தமிழ் முதல் தாள்
26ஆம் தேதி - தமிழ் 2-வது தாள்
27ஆம் தேதி - ஆங்கிலம் முதல் தாள்
28ஆம் தேதி - ஆங்கிலம் 2-வது தாள்
31ஆம் தேதி - கணிதம் முதல் தாள்
ஏப்ரல் 1ஆம் தேதி - கணிதம் 2-வது தாள்
3ஆம் தேதி - அறிவியல் முதல் தாள்
4ஆம் தேதி - அறிவியல் 2-வது தாள்
8ஆம் தேதி - வரலாறு மற்றும் குடிமையியல்
10ஆம் தேதி - புவியியல் மற்றும் பொருளாதாரம்
ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள்
மார்ச் 25ஆம் தேதி - மொழித்தாள்
27ஆம் தேதி - ஆங்கிலம் முதல் தாள்
28ஆம் தேதி - ஆங்கிலம் 2-வது தாள்
31ஆம் தேதி - கணிதம் முதல் தாள்
ஏப்ரல் 1ஆம் தேதி - கணிதம் 2-வது தாள்
3ஆம் தேதி - அறிவியல் முதல் தாள்
4ஆம் தேதி - அறிவியல் 2-வது தாள்
8ஆம் தேதி - வரலாறு மற்றும் குடிமையியல்
10ஆம் தேதி - புவியியல்
ஓ.எஸ்.எல்.சி.தேர்வு
மார்ச் 25ஆம் தேதி அரபி, சமஸ்கிருதம் மொழித்தாள்-1
27ஆம் தேதி தமிழ்
29ஆம் தேதி அரபி, சமஸ்கிருதம் மொழித்தாள் -2
31ஆம் தேதி ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல் 1ஆம் தேதி ஆங்கிலம் 2-வது நாள்
4ஆம் தேதி கணிதம்
5ஆம் தேதி சமஸ்கிருதம், அரபி சிறப்பு மொழிதாள்-3
8ஆம் தேதி அறிவியல்
10ஆம் தேதி சமூக அறிவியல்
இந்த தேர்வுகளுக்கான அட்டவணையை அரசு தேர்வு இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் வெளியிட்டார்.