Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மழை, வெள்ளம் : அமைச்சர்கள் நேரில் ஆய்வு!

Advertiesment
மழை, வெள்ளம் : அமைச்சர்கள் நேரில் ஆய்வு!
, திங்கள், 24 மார்ச் 2008 (11:43 IST)
தமிழகம் முதுவதும் கடந்த ஒரு வாரமாக பெய்துவரும் கன மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் தமிழக அமைச்சர்கள் இன்று நேரில் ஆய்வு செய்தனர்!

விருதுநகர் மாவட்டத்தில் இன்று உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் தலைமையில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் சந்திரசேகரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

ராஜபாளையும் பகுதியில் மழை நீரில் மூழ்கியுள்ள பயிர்களை பார்வையிட் அமைச்சர் ஸ்டாலின், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

மழையா‌லபெ‌ரிது‌மபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ‌விருதுநக‌‌ரமாவ‌ட்ட‌த்‌தி‌ல் 404 ஹெ‌க்டே‌ரநெ‌‌்ப‌யி‌ரசேத‌மஅடை‌ந்து‌ள்ளது. 51 ஹெ‌க்டே‌ர் ‌மிளகா‌யப‌யிரு‌ம், 15 ஹெ‌க்டே‌ர் ‌சூ‌ரியகா‌ந்‌தி ப‌‌யிரு‌ம், 10 ஹெ‌க்டே‌ரபரு‌த்‌தியு‌மசேத‌மஅடை‌ந்து‌ள்ளன.

நாளை, நெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு சென்று மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை ஸ்டாலின் ஆய்வு செய்கிறார்.

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் அமைச்சர் ஐ. பெரியசாமி, ராமநாதபுரத்தில் அமைச்சர் சுப. தங்கவேலன், சிவகங்கை மாவட்டத்தில் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் ஆ‌கியோ‌ரதலைமையி‌ல் வெள்ள பாதிப்பு ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil