சத்தியமங்கலம் அருகே மான் வேட்டைக்கு முயன்ற மூவரை வனத்துறையினர் கைது செய்தனர்.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வன கோட்டத்திற்குட்பட்டது சிக்கரசம்பாளையம் வனப்பகுதி. இங்குள்ள நரசன் குட்டை பகுதியில் சத்தியமங்கலம் மாவட்ட வன அதிகாரி ராமசுப்பிரமணியம் உத்திரவின் பேரில் சத்தி ரேஞ்சர் சிவமல்லு, வனவர்கள் ராஜேந்திரன், பால்நேசமணி, வனகாப்பாளர் குமரன், நாகராஜன், கலைச்செல்வன் மற்றும் வனகாவலர்கள் வடிவேல், சுப்பிரமணி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் கையில் சுருக்கு கம்பி மற்றும் அரிவாலுடன் மூன்று பேர் பதுங்கி இருப்பது தெரிந்தது. உடனே வனக்குழுவினர் அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் பெயர் வெள்ளையன் (44), பழனி (50) , சௌந்திரராஜன் (25) இவர்கள் மூவரும் சிக்கரசம்பாளையத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்தது.
இவர்கள் மானிற்கு சுறுக்கு வைத்து பிடிக்க வனப்பகுதிக்குள் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் மூவரையும் கைது செய்தனர்.
மற்றும் இவர்கள் வைத்திருந்த அரிவாள் மற்றும் சுறுக்கு கம்பி ஆகியவைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.