திருச்சி மாவட்டத்தில் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்ட 120 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
திருச்சியில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்டவர்கள் திருச்சி மெயின் கார்டு கேட் பகுதியில் அகில இந்திய வர்த்தக யூனியன் காங்கிரஸ் மூத்த தலைவர் கோபு தலைமையில் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோபு, இந்த சாலைமறியல், விவசாயத்திற்கான கோலப்பன் குழுவின் பரிந்துரையை உடனடியாக வெளியிடக் கோரியும், அதனை நிறைவேற்றக்கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி மாநில அளவிளான போராட்டத்தின் ஒரு பகுதி தான் என்று கூறினார்.
மேலும் விவசாய தொழிலாளர்களுக்கு வீட்டு மனை, மின்சாரம், மாதம் 30 கிலோ அரிசி ஆகியவற்றை இலவசமாக வழங்க கோரியும் இந்த போராட்டம் நடைபெற்றதாக கூறினார்.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.