கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வைக்கப்பட்டிருந்த 1 கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாயின.
இந்த விபத்தின் போது, அங்கிருந்த துணிகளை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட அந்த நிறுவனத்தைச் சேர்ந்த பிரபாகரன்(27), கரூரைச் சேர்ந்த செந்தில்குமார் (28) ஆகியோர் காயம் அடைந்தனர்.
அவர்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தீ விபத்து பற்றி தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.