தமிழகத்தில் வங்கிகளுக்கு வர வேண்டிய கல்விக் கடன் நிலுவைத் தொகை ரூ.2363 கோடி என்று மாநிலங்களவையில் மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பவன் குமார் பன்சல் தகவல் தெரிவித்தார்.
இது தொடர்பாக, மாநிலங்களவையில் நேற்று உறுப்பினர் ஞானதேசிகன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், ரிசர்வ் வங்கியின் தகவலின் படி தமிழ்நாட்டில் தனியார் வங்கி உள்ளிட்ட அனைத்து வங்கிகளிலும் நிலுவையில் உள்ள கல்விக் கடன் தொகை, 2005ஆம் ஆண்டு ரூ.1001 கோடியும், 2006ஆம் ஆண்டு ரூ.1859 கோடியும், 2007ஆம் ஆண்டு ரூ.2363 கோடியுமாக உள்ளது என்றார்.
மேலும், தமிழகத்தில் கல்விக் கடன் தொடர்பாக நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.