பெரம்பலூர் மாவட்டம் ஈசானை கிராமத்தில் பெரம்பலூர்- சேலம் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 51 பேர் காயம் அடைந்தனர்.
வெள்ளுவாடி என்னுமிடத்தில் இருந்து பெரம்பலூருக்கு புறப்பட்டு வந்த அரசு பேருந்து, பெரம்பலூர்- சேலம் நெடுஞ்சாலையில் பேருந்து வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த தண்ணீர் குட்டையில் கவிழ்ந்தது.
இதில் பேருந்தில் பயணம் செய்த 51 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவலறிந்த காவல் துறையினரும், தீயணைப்பு படையினரும் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர், அவர்களை மீட்டு அருகிலுள்ள அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.