தமிழகத்தில் சமீபத்தில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தேனி மாவட்டம் சில்வர்பட்டியில் 100க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்ததாக மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.ஜே. சிரு இன்று தெரிவித்தார்.
வெள்ளம் காரணமாக சில்வர்பட்டியில் உள்ள ஐந்து தெருக்களில் உள்ள வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதாகவும், வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதாகவும் கூறினார்.
இதற்கிடையே, மழையின் காரணமாக பெரியார் அணையின் நீர்மட்டம் 115.50 அடியாகவும், வைகை அணையில் நீர்மட்டம் 60.77 அடியாகவும் உயர்ந்துள்ளது.