Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகம் அமைதி பூங்காவாக இருப்பதற்கு காவல‌ர்க‌ள் தான் காரணம்: கருணாநி‌‌‌தி!

தமிழகம் அமைதி பூங்காவாக இருப்பதற்கு காவல‌ர்க‌ள் தான் காரணம்: கருணாநி‌‌‌தி!
, ஞாயிறு, 16 மார்ச் 2008 (12:31 IST)
"தமிழகம் அமைதி பூங்காவாக இருப்பதற்கு மக்களும், காவ‌ல்துறையு‌ம் தான் காரணம்'' என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.

சென்னை வண்டலூர் அருகே உள்ள ஊனமாஞ்சேரி என்ற கிராமத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியக கட்டிடம், சென்னை பரங்கிமலையில் கட்டப்பட்டுள்ள வடக்கு மண்டல காவல் துறைத் தலைவர் அலுவலக கட்டிடம் ஆகிய‌ற்றமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி ‌திற‌ந்தவை‌த்தபே‌சியதாவது:

காவ‌ல்துறை என்றாலே இன்றைக்கு சில அரசியல் கட்சிகளால் உடனடியாக விமர்சிக்கப்படுகின்ற ஒரு துறையாக இருக்கின்றது. இது அந்த அரசியல் கட்சிகள் எடுத்த இன்றைய நிலையல்ல. அது வெள்ளைக்காரன் காலத்தில் ஏற்பட்டது. அந்தப் பழைய நினைப்பிலே இன்றைக்கும் காவல‌ர்களைப் பார்த்தால் ஒரு கோபம் வருகிறது. இல்லை என்று சொல்லவில்லை.

அவர்களும் நம்முடைய நண்பர்கள் தான், நம்மவர்கள் தான் என்ற எண்ணம் உண்மையாக தெளிவாக வர முடியும். அதற்கு இரு சாராரும் பொது மக்களும் சரி, காவ‌ல் துறை நண்பர்களும் சரி பயிற்சிப் பெற்றாக வேண்டும். அந்தப் பயிற்சியையும் இந்த மைதானத்திலே கற்பிக்கின்றவர்கள் அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.

உலகத்தை நாம் பார்க்கிற நேரத்தில் இந்தியா எவ்வளவோ மேல். பக்கத்து நாடுகளைப் பார்க்கின்ற நேரத்தில் நம்முடைய பாரதம் எவ்வளவோ மேல். பாரத்திற்குள்ளேயே அருகருகே இருக்கின்ற மாநிலங்களைப் பார்க்கின்ற நேரத்தில் நம்முடைய தமிழ்நாடு அவைகளையெல்லாம் விட எவ்வளவோ மடங்கு மேல்.

அப்படிப்பட்ட இந்த மேலான நிலையை தமிழகத்திலே இந்தச் சூழ்நிலையிலே கூட உலகம் இன்றைக்குப் பல உபத்திரவங்களையெல்லாம் காணுகின்ற இந்தக் காலத்திலே கூட பல தீமைகளை பக்கத்திலே உள்ள தேசங்கள் சந்திக்கின்ற காலத்திலே கூட, தமிழகம் இன்றைக்கு அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்றால் அதற்கு இங்கேயுள்ள மக்களுடைய ஒத்துழைப்பும், அந்த மக்களிடத்திலே உங்கள் நண்பனாகப் பழகுகின்ற நம்முடைய அன்பிற்குரிய காவல்துறை நண்பர்களும் தான் அதற்குக் காரணம் என்பதை எண்ணும்போது, நான் ஏதோ காவல் துறையைப் புகழ்ந்து விட்டேன் என்று சாதாரண மக்களும் எண்ணிக் கொள்ளக் கூடாது எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil