Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாம்ராஜ்நகர் - சத்தி இரயில் திட்டத்தை நிறைவேற்றகோரி உண்ணாவிரதம்!

வேலு‌ச்சா‌மி

சாம்ராஜ்நகர் - சத்தி இரயில் திட்டத்தை நிறைவேற்றகோரி உண்ணாவிரதம்!
, சனி, 15 மார்ச் 2008 (16:17 IST)
சாம்ராஜ்நகர் - சத்தி இரயில் திட்டத்தை உடனே நிறைவேற்றகோரி சத்தியமங்கலத்தில் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் இ‌ன்று உண்ணாவிரத போராட்டம் நட‌ந்தது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இருந்து சாம்ராஜ்நகர் செல்லும் இரயில் திட்ட ஆய்வு பணிக்கு தமிழக வனத்துறை அனுமதி மறுத்து விட்டதாக நீண்ட நாட்களாக இந்த திட்டம் கிணற்றில் போட்ட கல்லாய் இருந்து வந்தது.

webdunia photoWD
மத்திய ஜவுளி துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இந்த திட்டத்தை நிறைவேற்ற தொடர்ந்து முயற்சித்து வருகிறார். தற்போது இந்த திட்டத்தை எதிர்த்து வனஆர்வாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த திட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் ஒரு குழு அமைத்தது.

அந்த குழுவினர் கடந்த ஆண்டு சத்தியமங்கலம் வனப்பகுதியில் அதாவது சர்ச்சைக்குறிய தமிழக வனப்பகுதி 58 கி.மீ. ூரத்தையும் ஆய்வு செய்து சென்றுவிட்டனர். ஆனால் இன்னும் அவர்கள் அறிக்கை சமர்பிக்கவில்லை.

ஆகவே விரைவில் இந்த அறிக்கையை சமர்பிக்க கோரி சத்தியமங்கலத்தில் இன்று முழு கடையடைப்பு, உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் நடந்த இந்த உண்ணாவிரத்தில் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் எல்.பி.தர்மலிங்கம், ஆர்.எம்.பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil