''அடுத்த தேர்தலிலும் தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும்'' என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு செய்தியாளர்களிடம் கூறுகையில், வேட்பு மனு தாக்கல் நிகழ்ச்சிக்கு வருகை தந்த முதலமைச்சர் கருணாநிதிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான நல்லுறவுக்கு தமிழகம் முன் உதாரணமாக திகழ்கிறது.
இரு அரசிடையே சுமூகமான உறவு இருந்து வருவதால் ரூ.39 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத் திட்டம் தமிழகத்திற்கு கிடைத்திருக்கிறது. இந்த கூட்டணி தொடர்ந்து நீடித்தால் பல நலத்திட்டங்கள் மேலும் கிடைத்து தமிழகம் வளர்ச்சி அடையும்.
அடுத்த தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும். மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்கள் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.