மாநிலங்களவை தேர்தலுக்கு தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று சட்டசபை செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான செல்வராஜியிடம் மனு தாக்கல் செய்தனர்.
மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க. கூட்டணி 5 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் தி.மு.க., காங்கிரசுக்கு தலா 2 இடங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. வேட்பாளர்களாக வழக்கறிஞர் ஜின்னா, வசந்தி ஸ்டான்லினும், மார்க்சிஸ்ட் வேட்பாளராக டி.கே.ரங்கராஜனும் அறிவிக் கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தி.மு.க. வேட்பாளர்கள் ஜின்னா, வசந்தி ஸ்டான்லி ஆகியோர் இன்று காலை சட்ட சபை செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான செல்வராஜிடம் மனுத் தாக்கல் செய்தனர். தலா ரூ.5,000 கொடுத்து உறுதி மொழி எடுத்து கொண்டனர். இவர்களது வேட்புமனுவை முதலமைச்சர் கருணாநிதி, அமைச்சர் அன்பழகன் ஆகியோர் முன்மொழிந்தனர்.
வேட்பு மனு தாக்கலின் போது அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உள்பட பலர் உடனிருந்தனர்.