Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறு,குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு மானியம்!

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர்

சிறு,குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு மானியம்!
, திங்கள், 10 மார்ச் 2008 (15:52 IST)
ஈரோடு மாவட்டத்தில் துவக்கப்படும் அனைத்து சிறு, குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு அரசு மானியம் அறிவித்துள்ளது. என ஈரோடு மாவட்ட ஆட்சியர் உதயச்சந்திரன் கூறினார்.

இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியது:

ஈரோடு மாவட்டத்தில் துவக்கப்படும் அனைத்து சிறு, குறு உற்பத்தி நிறுவனத்துக்கு எந்திர தளவாடங்களின் மதிப்பில் 15 சதவீதம் மூலதன மானியமும், குறைந்தழுத்த மின மானியம் முதல் 36 மாதத்துக்கு 20 சதவீதமும், ஆறு ஆண்டுக்கு செலுத்தப்படும் மதிப்பு கூட்டு வரிக்கு ஈடான தொகை மானியமும், முத்திரைதாள் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கும் அளிக்கப்படவுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர், குண்டடம் மற்றும் தாளவாடி பகுதிகள் தொழில்துறையில் பின்தங்கி உள்ளன. 25 பேரை வேலையில் அமர்த்தும் நிறுவனத்துக்கு ஐந்து சதவீதம் வேலை வாய்ப்பு பெருக்க மானியமும், மகளிர், பட்டியல் இனத்தோர், உடல் ஊனமுற்றோர் மற்றும் அரவாணிகள் தொழில் துவங்கும் பட்சத்தில் ஐந்து சதவீதம் கூடுதல் மூலதன மானியமும், குறைந்தழுத்த மின் மானியம் 36 மாதத்துக்கு 20 சதவீதமும், முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணத்தில் ஐந்து சதவீத சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்த வட்டாரங்களில் துவங்கப்படும் வேளாண் சார் உற்பத்தி நிறுவனங்களுக்கும் மானியம் அறிவிக்கப்பட்டுள்ளன.

எந்திர தளவாடங்களின் மதிப்பில் மூலதன மானியமாக 15 சதவீதமும், வேலை வாய்ப்பு பெருக்க மானியமாக 5 சதவீதமும், குறிப்பிட்ட வகை தொழில் முனைவோருக்கு 5 சதவீத கூடுதல் மூலதன மானியமும், மாசுகட்டுப்பாட்டு எந்திர தளவாடங்களுக்கு 25 சதவீத மானியமும், குறைந்தழுத்த மின்மானியம் மதல் 36 மாதத்துக்கு 20 சதவீதமும் வழங்கப்படும். மின் மற்றும் மின்னணு, தோல் மற்றும் தோல் பொருட்கள், வாகன உதிரி பாகங்கள், மருந்து பொருட்கள், மாசுகட்டுப்பாட்டு உபகரணங்கள், விளையாட்டு பொருட்கள், ஆயத்த ஆடைகள் ஆகிய சிறப்பு உற்பத்தி நிறுவனங்களுக்கு 15 சதவீதம் சிறப்பு மூலதன மானியமாக வழங்கப்படும்.

ஐந்து ஆண்டுக்கு தொழில்நுட்ப மேம்பாடு நவீனபடுத்தலுக்கு மூன்று சதவீதம் பின் முறை வட்டி மானியம் வழங்கப்படும். இதர சலுகைகளாக குறுந்தொழில்களுக்கு சிட்கோ தொழிற்பேட்டையில் 30 சதவீத இட ஒதுக்கீடு, சிப்காட் தொழிற்பேட்டையில் சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு, தனியார் மூலம் தொழிற்பேட்டை உருவாக்க அதிகபட்சமாக 20 சதவீதம் மானியம், அரசு கொள்முதலில் 15 சதவீதம் விலை முன்னுரிமை அளிக்கப்படும். பணியாளர் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு 50 சதவீதம் மானியம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்ச்சிக்கு தனி குழு அமைத்தல், தொழில் துவங்க தேவையான அனுமதி வழங்க ஒற்றை சாளர முறை போன்றவை அளிக்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் உதயசந்திரன் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil