திருச்சி அருகே காவேரி ஆற்றில் குளித்த கால்சென்டர் ஊழியர்கள் மூன்று பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருச்சி மாவட்டம், காவுதராசநல்லூர் கிராமத்தில் அணைக்கட்டு ஒன்று உள்ளது. இங்குள்ள காவேரி நீரில் குளிக்க நேற்று திருவெறும்பூர், கோட்டாபட்டுவை சேர்ந்த எபினேசர் (23), ஜாண் பிலிப் (19), மருதைராஜ் ஆகியோர் வந்தனர்.
இவர்கள் ஆழமான பகுதிக்கு சென்று குளித்தனர். அப்போது நீச்சல் தெரியாததால் மூன்று பேரும் நீரில் மூழ்கி பலியாயினர்.
தகவல் அறிந்ததும் காவல்துறையினர் தீயணைப்பு துறைக்கு தெரியப்படுத்தினர். அவர்கள் விரைந்து வந்து எபினேசர், ஜாண் பிலிப் ஆகியோரின் உடல்களை கைப்பற்றினர். ஆனால் மருதைராஜ் உடல் கிடைக்கவில்லை. உடலை தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
எபினேசர், ஜாண் பிலிப் ஆகியோரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல் துறையினர் நடத்திய விசாரணையில், பலியான மூன்று பேரும் கால் சென்டர் ஊழியர்கள் என்று தெரியவந்தது.