Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌வீ‌ட்டுவ‌ரி, சொ‌த்துவ‌ரி உய‌ர்‌கிறது: த‌மிழக அரசு உ‌த்தரவு!

‌வீ‌ட்டுவ‌ரி, சொ‌த்துவ‌ரி உய‌ர்‌கிறது: த‌மிழக அரசு உ‌த்தரவு!
, ஞாயிறு, 9 மார்ச் 2008 (13:17 IST)
தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், மூன்றாம் நிலை நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் இந்த ஆண்டு ஏப்ரல் 1-ஆ‌ம் தேதியிலிருந்து சொத்து வரியை திருத்தியமைக்கும் பணியை துவக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூ‌றி‌யிரு‌ப்பதாவது:

காலிமனை உட்பட அனைத்து சொத்துகளுமே சொத்து வரி மாற்றத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும். சொத்துக்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக மின்சார வாரியம், நகரமைப்பு துறை, வாக்காளர் பட்டியல், ரேஷன் கார்டுகள் போன்ற விவரங்களை சேகரித்து கொள்ளலாம்.

சொத்துவரி நிர்ணயத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு எவ்வித சலுகையும் அளிக்க கூடாது. 5 முதல் 15ஆண்டுகள் வரையிலான கட்டிடங்களுக்கு 10 ‌விழு‌க்காடு தள்ளுபடியும், 15 முதல் 25 ஆண்டுகள் பழமையான கட்டிடங்களுக்கு 15 ‌விழு‌க்காடு தள்ளுபடியும், 25 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கட்டிடங்களுக்கு 20 ‌விழு‌க்காடு தள்ளுபடியும் அளிக்க வேண்டும்.

வீட்டு உரிமையாளர்களே வசிக்கும் கட்டிடங்களுக்கு எவ்வித தள்ளுபடியும் அளிக்க கூடாது. கட்டிடங்களை கீற்று கொட்டகை, ஓட்டு வீடு, சிமெண்ட் கான்கிரீட் என பிரித்து மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. கான்கிரீட் வீடுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை மதிப்பை விட தொழிற்கூடங்கள் அமைந்துள்ள கட்டிடங்களுக்கு இரண்டு மடங்கு அதிகமாக அடிப்படை மதிப்பு நிர்ணயிக்க வேண்டும். வணிக பயன்பாட்டுக்கான கட்டிடங்களுக்கு மூன்று மடங்கு அதிகமாக நிர்ணயிக்கப்பட வேண்டும்.

சொத்து வரியை மாற்றியமைக்கும் போது, குடியிருப்பு கட்டடங்களுக்கு 25 ‌விழு‌க்காடு, தொழிற்கூடங்களுக்கு 100 ‌விழு‌க்காடு‌ம், வணிக கட்டடங்களுக்கு 150 ‌விழு‌க்காடு‌ம் உயர்த்தப்பட வேண்டும். இதில் சொத்து மதிப்பீடு செய்யப்பட்ட ஆண்டுகளுக்கு ஏற்ப உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும். அரசு கட்டடங்களை பொறுத்த வரை சொத்து வரி 50 ‌விழு‌க்காடு உயர்த்தப்பட வேண்டும்.

இவ்வாறு அ‌தி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil