Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஈரோட்டில் தையற்கலை தொழிலாளர்கள் உண்ணாவிரதம்!

வேலு‌ச்சா‌மி

Advertiesment
ஈரோட்டில் தையற்கலை தொழிலாளர்கள் உண்ணாவிரதம்!
, வெள்ளி, 7 மார்ச் 2008 (15:56 IST)
தையற் கடைகளுக்கு மின் கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் எ‌ன்பது உ‌ள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் உண்ணாவிரத போரா‌ட்ட‌ம் நட‌த்‌தின‌ர்.

தையற் கடைகளுக்கு மின் கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். தமிழ்நாடு தையற் தொழிலாளர்கள் நலவாரியத்தில் இணைந்து 60 வயதை கடந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் எவ்வித நிபந்தனையின்றி மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும். நல வாரிய உதவிகளை காலதாமதமின்றி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தையற்கலை தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாநகராட்சி அலுவலகம் முன் நடந்த இந்த போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜீவானந்தம் துவக்கி வைத்தார்.

Share this Story:

Follow Webdunia tamil