Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஈரோடு அருகே தி.மு.க. மகளிரணி அமைப்பாளர் மீது குண்டுவீச்சு!

வேலு‌ச்சா‌மி

Advertiesment
ஈரோடு அருகே தி.மு.க. மகளிரணி அமைப்பாளர் மீது குண்டுவீச்சு!
, வெள்ளி, 7 மார்ச் 2008 (12:41 IST)
ஈரோடு மாவட்ட தி.மு.க. மகளிரணி அமைப்பாளர் கார் மீது, ஒரு கும்பல் குண்டு வீசி கொலை செய்ய முயன்றது. இந்த சம்பவத்தில் தி.மு.க.அமைப்பாளர் படுகாயமடைந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் சிக்கமநாயக்கன்பட்டியில் உள்ளது சுப்பிரமணியம் இன்ஜினியரிங் கல்லூரி. இக்கல்லூரியில் ஈரோடு மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த தி.மு.க. மகளிரணி மாவட்ட அமைப்பாளர் சத்யா பழனிச்சாமி செயல் அலுவலராக பணிபுரிகிறார். இதுக்கு முன்னதாக கல்லூரியில் செயல் அலுவலராக இருந்த சுந்தரம் மீது முறைகேடு புகார் எழுந்ததால், அவர் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டு சத்யா நியமிக்கப்பட்டார்.

இதனால் சுந்தரத்திற்கும் சத்யா பழனிசாமிக்கும் விரோதம் ஏற்பட்டது. இவர் மீது கோபமடைந்த சுந்தரம் ஏற்கனவே மிரட்டியுள்ளார். நாள்தோறும் பணி முடிந்ததும் சத்யா பழனிசாமி தாராபுரம் தன் வீட்டிற்கு வந்துவிடுவார். நேற்று மாலை காரை ஓட்டுனர் சுப்பிரமணியம் ஓட்டிவந்தார். அவருட‌ன் கல்லூரி சமையல் ஒப்பந்தகாரர் கீரனூரை சேர்ந்த வசந்த் உடன் வந்தார்.

மோதுபட்டி அருகே கார் வரும்போது ஒரு கும்பல் வ‌ழிம‌றி‌த்து வெடிகுண்டுகளை வீசியது. கார் கண்ணாடியை உடைத்து சத்யாவை தாக்கியது. இதில் சத்யாவின் கழுத்தில் இருந்த 10 பவுன் செயின், 5 பவுன் வளையல், செ‌ல்பே‌சி ஆகியவற்றை அ‌ந்த கும்பல் கொள்ளையடித்து த‌ப்‌பி செ‌ன்றது.

காயமடைந்த சத்யா தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தாராபுரம் காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டு காவலர்கள் விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil