Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோ‌‌பி‌யி‌ல் அரசு பேரு‌ந்து ப‌றிமுத‌ல்!

வேலு‌ச்சா‌மி

கோ‌‌பி‌யி‌ல் அரசு பேரு‌ந்து ப‌றிமுத‌ல்!
, வியாழன், 6 மார்ச் 2008 (16:57 IST)
பாதிக்கப்பட்டவர்க‌், விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு தொகை செலுத்தாத அரசு பேரு‌ந்தகோபியில் ப‌றிமுத‌லசெய்யப்பட்டது.

நம்பியூர் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த கருப்பண்ண கவுண்டர் என்பவரது மகன் பழனிசாமி (45). 2001ம் ஆண்டு கோபி நம்பியூர் ரோடு கொன்னமடை பகுதியில் இரச‌க்கவாகன‌த்‌‌தி‌லசென்ற போது, அரசு பேரு‌ந்தமோதியதில் பழனிசாமி பரிதாபமாக இறந்தார். ரூ. 7 லட்சம் இழப்பீடு கேட்டு பழனிசாமி மனைவி மாரியம்மாள், மகன் ஆனந்தகுமார், பெற்றோர்கள் கருப்பண்ண கவுண்டர், மங்காத்தாள் ஆகியோர் கோபி முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த அப்போதைய நீதிபதி ஜெகநாதன், பழனிசாமி குடும்பத்துக்கு இழப்பீட்டு தொகை ரூ.4 லட்சத்து 75 வழங்க உத்தரவிட்டார். அரசு போக்குவரத்து கழக நிர்வாகம், இழப்பீடு தொகை செலுத்த தவறியதால், மனுதாரர் தரப்பில் நிறைவேற்றி மனு தாக்கல் செய்யப்பட்டது.

முதன்மை சார்பு மன்ற நீதிபதி சரவணன் விசாரித்து, அரசு பேரு‌ந்தஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதையடு‌த்தகோபி பேரு‌ந்து ‌நிலைய‌த்‌தி‌லசத்தியம‌ங்கல‌மசெல்ல தயாராக இருந்த அரசு பேரு‌ந்தநீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து ‌நீ‌திம‌ன்வளாக‌த்து‌க்ககொ‌ண்டவ‌ந்தன‌ர். இ‌ந்த ‌நிக‌ழ்வா‌லகோபி பேரு‌ந்து ‌நிலைய‌த்‌தி‌லசிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த வருடம் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்காத காரணத்தால் ஐந்துக்கும் மேற்பட்ட அரசு பேரு‌ந்துகள் ஜப்தி செய்யப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil