நோயால் பாதிக்கப்பட்ட அம்மாவை பார்க்க போலி கடவுசீட்டில் மலேசியாவில் இருந்து வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரை சேர்ந்தவர் பல்பீர் சிங் (20). இவர் மலேசியாவில் கட்டட வேலை செய்து வருகிறார். மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நேற்றிரவு சென்னை விமான நிலையம் வந்த வந்த அவரை, குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் அவரது கடவுசீட்டு போலியானது என தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், தனது தாயார் ஜலந்தரில் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பார்க்கச் செல்வதற்காக தனது கடவுசீட்டை தான் வேலை பார்க்கும் நிறுவனத்திடம் கேட்டுள்ளார். அவர்கள் தர மறுக்கவே, ஏஜெண்டுகள் மூலம் போலி பாஸ்போர்ட்டை தயார் செய்து இந்தியா வந்துள்ளது தெரிய வந்தது.
இதையடுத்து காவல்துறையினர் பல்பீர் சிங்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.