Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஊனமுற்றோர்க்கு சமூக பாதுகாப்புத் திட்டங்கள் அறிவிப்பு!

ஊனமுற்றோர்க்கு சமூக பாதுகாப்புத் திட்டங்கள் அறிவிப்பு!
, புதன், 5 மார்ச் 2008 (18:55 IST)
தமிழ்நாடு ஊனமுற்றோர் நல வாரியத்தின் மூலமாக ஊனமுற்றோர், அவர்களதகுடும்பத்தினருக்கசமூக பாதுகாப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

தேசிய ஊனமுற்றோர் அடையாள அட்டை வைத்திருக்கும் ஊனமுற்ற நபர்கள் இத்திட்டங்களின் மூலம் பயன்பெற தகுதி பெற்றவர்கள். இவர்களவிபத்தில் இறந்தாலோ அல்லது கை, கால் இழந்தாலோ அல்லது காயமுற்றாலோ மருத்துவர் மதிப்பீடு செய்யும் விழுக்காட்டின்படி, அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும். ஊனமுற்றோரின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகையாக ரூ.1,000 முதல் ரூ.6,000 வரை வழங்கப்படும்.

திருமண உதவி தொகையாக ரூ.2,000-ம், பிரசவத்திற்கு மாதம் ரூ.1,000 வீதம் 6 மாதத்திற்கு ரூ.6 ஆயிரமும், கருச்சிதைவு மற்றும் கருக்கலைப்பிற்கு ரூ.3,000, மூக்கு கண்ணாடிக்கு ரூ.500, இயற்கை மரணத்திற்கு ரூ.5 ஆயிரம் ஈமச்சடங்கு செலவுகளுக்கு ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும்.

இத்திட்டங்களின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் ஊனமுற்ற நபர்கள், மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு மைஅலுவலகங்களில் விண்ணப்பப் படிவங்களை பெற்று விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளவர்களுக்கதமிழ்நாடு ஊனமுற்றோர் நல வாரியத்தின் மூலம் நிதி உதவி வழங்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆ‌ட்‌சிய‌ர் ஜெயா தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil