சிதம்பரத்திலுள்ள தில்லை நடராசர் கோயிலை தீட்சிதர்கள் பிடியில் இருந்து மீட்டு, தமிழக அரசின் இநது அறநிலைத் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று மக்கள் உரிமைகள் கூட்டமைப்பு தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளது.
தில்லை நடராசர் கோயிலிற்குள் சென்று திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடுவதற்கு அனுமதி அளித்தும், அதனை தடுக்க முற்பட்ட தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்தக் கோயிலிற்குள் தீட்சிதர்கள் மேற்கொண்டுவரும் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க மத்திய புலனாய்வுக் கழகத்திற்கு உத்தரவிடவேண்டும் என்றும் மக்கள் உரிமைகள் கூட்டமைப்பின் செயலர் ஜி. சுகுமாரன் கூறியுள்ளார்.
திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடியதற்காக அம்மேடை தீட்டாகிவிட்டது என்று கூறி, அதற்காக பூஜைகள் செய்திருப்பது மனிதனை மனிதன் இழிவு படுத்தும் செயலாகும் என்று மக்கள் உரிமைகள் கூட்டமைப்பு கூறியுள்ளது.