Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேவாரம் பாடுவதை எதிர்ப்போர் மீது கடும் நடவடிக்கை

தேவாரம் பாடுவதை எதிர்ப்போர் மீது கடும் நடவடிக்கை
, செவ்வாய், 4 மார்ச் 2008 (15:32 IST)
சித‌ம்பர‌ம் நடராஜ‌ர் கோ‌யி‌லி‌ல் தொடர்ந்து தேவார‌ம், ‌திருவாசக‌ம் பாடி வழிபடலாம். இதற்கு பக்தர்கள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இதை எதிர்ப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேவாரம், திருவாசகம் பாடி தாய்த் தமிழ் மொழியில் வழிபடுவதற்கு அரசு செயலர் உத்தரவிடலாம் என்று உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. அறநிலையத்துறை செயலரும் அவ்வாறே உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தேவாரம் பாடி வழிபட கோயிலுக்குள் சென்ற ஓதுவார் உள்ளிட்ட பக்தர்களை அங்கு திரண்டு வந்த தீட்சிதர்களால் தடுக்கப்பட்டனர். அதனால் ஏற்பட்ட அமளியில் இரு தரப்பினர் மீதும் காவல் துறையினரால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சட்ட ரீதியான அந்த வழக்கின் முடிவு கோயிலில் நடைபெற்ற தேவையற்ற அந்த கலவரத்தின் அடிப்படையில் தீர்ப்பாக அமையும் என்பது ஒருபுறமிருக்க, அதற்கிடையே ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசு ஆணையின்படி, தேவார திருமுறைகளை ஓதி வழிபட விரும்பும் பக்தர்கள் அனைவரும் கட்டணம் ஏதும் செலுத்தாமல் வழிபடலாம்.

இதனைத் தீட்சதர்கள் உள்ளிட்ட யாரும் தடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்வதோடு, இந்த வேண்டுகோள் மீறப்பட்டால் சட்டப்படி கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என்றும் எச்சரிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil