ரேசன் கடைகளில் முறைகேடுகளில் ஈடுபட்ட 379 பேர் தற்காலிகப் பணிநீக்கமும் 8 பேர் நிரந்தரப் பணிநீக்கமும் ய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொதுவிநியோகத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் மாவட்ட வாரியாக ஆய்வு செய்து வருகிறார்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர் ஆகிய ஒன்பது மாவட்டங்களில் அமைச்சர் கோ.சி. மணி ஆய்வு செய்தார்.
அதன் அடிப்படையில் ரேசன் கடைகளில் முறைகேடுகளில் ஈடுபட்ட 379 பேர் கடந்த ஆறு மாதங்களில் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
13 பணியாளர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 18 பேர் நிரந்தரப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.