Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ம‌க்களு‌க்கு ம‌கி‌ழ்‌ச்‌சி தரு‌ம் ப‌ட்ஜெ‌ட்: ராமதா‌ஸ்!

ம‌க்களு‌க்கு ம‌கி‌ழ்‌ச்‌சி தரு‌ம் ப‌ட்ஜெ‌ட்: ராமதா‌ஸ்!
, வெள்ளி, 29 பிப்ரவரி 2008 (19:17 IST)
மக்களு‌க்கமகிழ்ச்சி தரு‌மநிதிநிலை அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது என்று பா.ம.க. நிறுவனர் மரு‌த்துவ‌ரச.ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்‌டு‌‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், "நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்த நிதியமைச்சர் ப.சிதம்பரம், வழிகாட்டிகளாகத் திகழும் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பாராட்டுக்கு உரியவர்கள்.

பல்வேறு சலுகைகளும், நிவாரணங்களும் அளிக்கப்பட்டுள்ளதால், அரசின் செலவு பல மடங்கு உயர்ந்துள்ளது. என்ற போதிலும், ஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறை கணிசமாகக் குறைந்துள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நிதி மேலாண்மைத் திறமைக்கு இது சிறந்த எடுத்துக்காட்டு.

நாட்டின் பொருளாதாரத்தை எதிர்நோக்கி உள்ள பிரச்சனைகளையும், அடித்தள மக்களின் பிரச்சனைகளையும் தீர்க்கும் வகையில் பல அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. விவசாயிகளின் வங்கிக் கடன்களைக் குறைக்க வேண்டும் என நானும், முதல்வர் கருணாநிதியும் வலியுறுத்தினோம். இக்கோரிக்கை ஏற்கப்பட்டு, விவசாயிகளின் கடன் சுமை குறைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

அரசு அறிவித்துள்ள கடன் நிவாரணத்தால் மூன்று கோடி சிறு, குறு விவசாயிகளும், ஒரு கோடிக்கு மேற்பட்ட இதர விவசாயிகளும் பலன் பெறுகின்றனர். இந்திய வரலாற்றில் இப்படி ஒரே கட்டத்தில் நான்கு கோடிக்கும் மேற்பட்டோர் கடன் நிவாரணம் பெறுவது இதுவே முதல் முறை.

பழைய கடன்கள் ரத்து செய்யப்படுவதுடன், உழவர்களுக்கு இந்த ஆண்டு ரூ.2 லட்சத்து 82 ஆயிரம் கோடி புதிதாகக் கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாசனம், விவசாயத்துக்கான அகக் கட்டுமானங்களை உருவாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும், 30 லட்சத்துக்கும் அதிகமான நெசவாளர்கள் பயன் பெறும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகளும் வரவேற்கத் தக்கவை" எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil