Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திம்பம் மலைப்பகுதியில் கடும் மூடுபனி!

வேலு‌ச்சா‌மி

திம்பம் மலைப்பகுதியில் கடும் மூடுபனி!
, வியாழன், 28 பிப்ரவரி 2008 (16:13 IST)
சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப்பகுதியில் கடும் மூடுபனி ஏற்பட்டுள்ளதால் ஓ‌ட்டுந‌ர்க‌ள் வாகனங்களை இயக்க ‌சிரம‌ப்படு‌கி‌ன்றன‌ர்.

webdunia photoWD
ஈரோடு மாவட்டம். ச‌த்தியமங்கலம் பண்ணாரி அடுத்துள்ளது திம்பம் மலைப்பகுதி. கடல் மட்டத்தில் இருந்து ஆயிரத்து 105 மீட்டர் உயரமுள்ள திம்பம் மலைப்பகுதி சுற்றிலும் வனப்பகுதிகளை கொண்டது. திம்பம் வழியாகத்தான் தாளவாடி மற்றும் கர்நாடகா மாநிலம் கொள்ளேகால், மைசூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கும் செல்லமுடியும். ஆகவே இந்த மலைப்பகுதியில் வழக்கமாக குளிர் அதிகமாக இருக்கும்.

நேற்று மற்றும் இன்று காலை திம்பம் மலைப்பகுதியில் கடுமையான மூடுபனி நிலவியது. ஓ‌ட்டுந‌ர்க‌ள் வாகனங்களின் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு சென்றனர். வாகனங்களும் ஊர்ந்து ஆமைவேகத்தில் சென்றன.

ஆசனூர் பகுதியிலும் இந்த மூடுபனி நிலவியது. நேற்று காலை 7 மணிக்கு லேசாக மழை தூறலு‌ம் விழுந்தது. தூறலுக்கு பின்தான் திடீரென மூடுபனி ஏற்பட்டது. இந்த மூடுபனியால் பேரு‌ந்தஓ‌ட்டுந‌ர்க‌ள் திண்டாடினாலும், பேரு‌ந்தபயணிகள் மூடுபனியை பார்த்து ரசித்து மகிழ்‌ந்தன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil