கோயம்புத்தூரில் ஆடு, மாடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட வந்தவர்கள் மீது காய்கறி ஏற்றி வந்த லாரி மோதி 3 பேர் பலியாயினர்.
கோவை மாவட்டம், உடுமலை வன பகுதிகளில் ஆடு, மாடுகளை மேய்க்க கூடாது என்று வனத்துறை அதிகாரிகள் தடைவிதித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 'தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்' சார்பில் வனத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக அந்த பகுதியை சேர்ந்த பல்வேறு விவசாயிகள் நேற்று இரவு நூற்றுக்கணக்கான கால்நடைகளுடன் மடத்துக்குளம் அருகில் உள்ள மைவாடிபிரிவு என்னும் இடத்தில் நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது காய்கறிகள் ஏற்றிக்கொண்டு ஒட்டன்சத்திரத்தில் இருந்து பாலக்காடு நோக்கி சென்று கொண்டிருந்த லாரி ஒன்று திடீரென கூட்டத்துக்குள் புகுந்தது.
இதில் ரங்கசாமி. லட்சுமணன், மணி என்ற விவசாயிகள் நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாயினர். மேலும் பல ஆடுகளும் உடல் நசுங்கி செத்தது.
இந்த பற்றி தகவல் அறிந்த அப்பகுதி மக்களும், போராட்டம் நடத்த வந்தவர்களும் கால்நடைகளுடன் வனத்துறை அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.