பட்டுக்கோட்டை அரசு ஆலை கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பில், தமிழக உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் உத்தரவுபடி, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக் கோட்டையில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நவீன அரிசி ஆலை கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து விசாரித்திட உயர் மட்ட அதிகாரிகள் குழு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் எ.சங்கரலிங்கம், விழிப்புப்பணி அலுவலர், என்.வி. கோதண்டராமன், பொது மேலாளர் (வாணிபம்), டி.ஜேக்கப் ஜெயசந்திரா, கட்டுமானப் பொறியாளர் ஆகியோர் உள்ளனர்.
இக்குழு தீவிபத்து ஏற்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று தீவிபத்திற்கான காரணங்களை விசாரித்து இரு தினங்களுக்குள் அறிக்கையை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.