Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழக எம்.பி.க்களை தேர்ந்து எடுக்க மார்ச் 26ஆ‌ம் தேதி தேர்தல்!

தமிழக எம்.பி.க்களை தேர்ந்து எடுக்க மார்ச் 26ஆ‌ம் தேதி தேர்தல்!
, செவ்வாய், 26 பிப்ரவரி 2008 (10:12 IST)
தமிழ்நாட்டில் இருந்து மா‌நில‌ங்களவை‌க்கு 6 உறு‌ப்‌பின‌ர்களை தேர்ந்து எடுக்க மார்ச் 26ஆ‌ம் தேதி தேர்தல் நடைபெறு‌ம் எ‌ன்று தேர்தல் ஆணைய‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

மா‌நில‌ங்களவை உறுப்பினர்களாக இருப்பவர்களில் 56 பேரின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடை‌கிறது. இவர்களில் 7 பேர் மராட்டிய மாநிலத்தையும், தலா 6 பேர் தமிழ்நாடு, ஆந்திராவையும், தலா 5 பேர் மேற்கு வங்காளம், பீகார் மாநிலங்களையும், தலா 4 பேர் ஒரிசா, குஜராத் மாநிலங்களையும், தலா 3 பேர் மத்திய பிரதேசம், அசாம், ராஜஸ்தான் மாநிலங்களையும், தலா 2 பேர் ஜார்கண்ட், அரியானா, சத்தீஷ்கார் மாநிலங்களையும், தலா ஒருவர் இமாசல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, அருணாசல பிரதேசத்தையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டு மா‌நில‌ங்களவை உறுப்பினர்களாக இருக்கும் 6 பேரின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் 2-ந் தேதியுடன் முடிவடைகிறது. அவர்கள் விவரம்:

ஆர்.சண்முகசுந்தரம் (தி.மு.க.), மத்திய மந்திரி ஜி.கே.வாசன் (காங்கிரஸ்), எஸ்.பி.எம்.சையது கான் (அ.‌தி.மு.க.), தங்க தமிழ்ச்செல்வன் (அ.‌ி.ு.க.), சி.பெருமாள் (அ.‌ி.ு.க.), வழ‌க்க‌றிஞ‌ர் என்.ஜோதி (அ.‌ி.ு.க.). இவர்கள் 6 பேரையும் சேர்த்து 56 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், காலியாகும் அந்த இடங்களுக்கு மார்ச் 26ஆ‌ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான தேர்தல் அறிவிக்கை மார்ச் 8ஆ‌ம் தேதி வெளியிடப்படும். அன்றே வேட்புமனு தாக்கல் தொடங்கும். மனுதாக்கல் செய்ய மார்ச் 15ஆ‌ம் தேதி கடைசி நாள். 17ஆ‌ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். போட்டியில் இருந்து விலக விரும்புவோர் மனுக்களை வாபஸ் பெற மார்ச் 19ஆ‌ம் தி கடைசி நாள்.

மார்ச் 26ஆ‌ம் தி காலை 9 அணி முதல் மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். தற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணைய‌த்‌தி‌ன் யலாளர் பெர்னார்டு ஜான் டெல்லியில் நேற்று வெளியிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil