Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

1,330 திருக்குறள்களை ஒப்புவித்த மாணவ‌ர்களு‌க்கு ரூ.5 ஆயிரம் பரிசு!

1,330 திருக்குறள்களை ஒப்புவித்த மாணவ‌ர்களு‌க்கு ரூ.5 ஆயிரம் பரிசு!
, செவ்வாய், 26 பிப்ரவரி 2008 (09:43 IST)
1,330 திருக்குறள்களை ஒப்புவித்த மாணவ-மாணவிக்கு தலா ரூ.5 ஆ‌‌யி‌‌ர‌த்தை தமிழக அரசு வழங்குகிறது.

இது குறித்து த‌மிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், உலகத் தமிழ்மறை என்று போற்றப்படும் திருக்குறளின் 1,330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் மாணவ-மாணவிகளைப் பாராட்டும் வகையில், அவர்களுக்கு குறள் பரிசாக ரூ.5 ஆயிரம் வீதம், 24 மாணவர்களுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வழங்க முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

இந்த ஆணையின்படி, சென்னை பெரம்பூர் ரயில்வே மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் இரா.உதயப்பிரகாஷ், சென்னை விருகம்பாக்கம் ஏ.வி.எம். ராஜேஸ்வரி பதின் நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் ச.உமாபாரதி ஆகியோருக்கு 1,330 குறட்பாக்களையும் ஒப்புவித்த திறமையைப் பாராட்டி ஒவ்வொருவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது.

தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள், செய்தித் துறை செயலாளர், தமிழ் வளர்ச்சி இயக்குனர் ஆகியோர் அந்த மாணவனும், மாணவியும் படிக்கும் பள்ளிக்கு நேரில் சென்று உரிய அரசாணையையும், பரிசுத் தொகையையும் வழங்க உள்ளனர் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil