Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வழி தவறி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்து சாவு!

வேலு‌ச்சா‌மி

Advertiesment
வழி தவறி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்து சாவு!
, திங்கள், 25 பிப்ரவரி 2008 (16:57 IST)
சத்தியமங்கலத்தில் வழிதவறி வந்த புள்ளிமானை நாய்கள் கடித்து குத‌றியதா‌ல் பரிதாபமாக இறந்தது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்து வடக்கு பகுதியில் உள்ளது பெரியகுளம். இது வனப்பகுதியின் எல்லை பகுதி. இதையொட்டியுள்ள வனப்பகுதியில் யானை, காட்டெருமை, செந்நாய் மற்றும் புள்ளிமான்கள் கூட்டம், கூட்டமாக வாழ்ந்து வருகிறது.

webdunia photoWD
வனவிலங்குகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலத்திற்கு உணவுக்காக வரும்போது திரும்பி செல்ல வழிதெரியாமல் ஊருக்குள் வந்து விடுவதும் உண்டு. நேற்று முன்தினம் இரவு பெரியகுளம் பகுதிக்கு நான்கு வயது மதிக்கத்தக்க புள்ளிமான் ஒன்று வழிதவறி வந்துவிட்டது.

கொம்பு முளைத்த இந்த ஆண் புள்ளிமான் சத்தியமங்கலம் நகர் பகுதியான வரதம்பாளையம் பகுதிவரை வந்துள்ளது. வரும் வழியில் பல்வேறு இடங்களில் நாய்கள் ஒன்றுகூடி தவறி வந்த புள்ளிமானை கடித்து குதறியது

சத்தியமங்கலம் வன‌த்துறை‌யின‌ர் சிவமல்லு, பால்நேசமணி ஆ‌கியோ‌ர் இறந்த புள்ளிமானை தங்கள் வாகனத்தில் எடுத்து சென்று கால்நடை மருத்துவரிடம் பரிசோதனை செய்து பின் புதைத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil