Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கர்நாடகா‌வி‌ல் லாரி வேலை நிறுத்தம்: ஈரோட்டில் ரூ.15 கோடி வர்த்தகம் பாதிப்பு!

வேலு‌ச்சா‌மி

கர்நாடகா‌வி‌ல் லாரி வேலை நிறுத்தம்: ஈரோட்டில் ரூ.15 கோடி வர்த்தகம் பாதிப்பு!
, திங்கள், 25 பிப்ரவரி 2008 (16:58 IST)
கர்நாடகா மாநிலத்தில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் மூன்றாவது நாளாக நீடித்து வருவதால் ஈரோடு மாவட்டத்தில் இருந்து மஞ்சள், ஜவுளி மற்றும் இதர பொருட்கள் பிற மாநிலங்களுக்கு அனுப்ப முடியாமல் ரூ.15 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

கர்நாடக அரசு, லாரிகளுக்கு வேகட்டுப்பாட்டு கருவி பொருத்த முதலில் உத்தரவிட்டது. இதை எதிர்த்து லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டனர். இதனால் அந்த உத்தரவை அரசு திரும்ப பெற்றது. புதிய லாரிகளுக்கு மட்டும் இந்த கருவியை பொருத்தினால் போதும் என்றது.

இ‌ந்த உ‌த்தரவை எ‌தி‌ர்‌த்து கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர‌ப்ப‌ட்டது. இ‌ந்த வழக்கை விசாரி‌த்த உயர் நீதிமன்றம் பழைய மற்றும் புதிய லாரிகளில் வேக கட்டுப்பாட்டு மீட்டர் பொருத்த வேண்டும் என உத்தரவிட்டது. வேகம் 50 கி.மீ. என்றும் அரசு நிர்ணயித்தது. இதற்கு எ‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌த்து க‌ர்நாடக லாரி உரிமையாளர் சம்மேளனம் கட‌ந்த 22ஆம் தேதி நள்ளிரவு முதல்
வேலை ‌‌நிறு‌த்த‌ம் செ‌ய்து வரு‌கிறது.

கர்நாடகாவி‌ல் நட‌ந்து வரு‌ம் வேலை ‌‌நிறு‌த்த‌த்தா‌ல் ஈரோட்டில் இருந்து தினமும் கர்நாடகா மாநிலம் வழியாக சென்று வரும் 1,500 லாரிகள் மூன்று நாளாக செல்ல முடியாமல் ஈரோடு மற்றும் சத்தியமங்கல‌‌ம் நக‌ரி‌ல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மஞ்சள், ஜவுளி, எண்ணெய் வகைகள், சோளம் போன்றவை அனுப்ப முடியாமல் தேங்கியுள்ளது. கர்நாடகா மாநிலம் கொள்ளேகால், சாம்ராஜ்நகர் பகுதியில் இருந்து ஈரோடு மார்க்கெட்டுக்கு வரும் மஞ்சள் வரத்தும் பாதிக்கப்பட்டது.

கொள்ளேகால், மங்களூரூ பகுதியில் இருந்து ஈரோடுக்கு தினமும் ரூ. 1 கோடி மதிப்புள்ள மஞ்சள் ஈரோடு மார்க்கெட்டுக்கு வருகிறது. இ‌ந்த வேலை ‌நிறு‌த்த‌த்த‌ா‌ல், நேற்று மஞ்சள் வரத்து முற்றிலும் நின்றது.

அதேபோல், ஈரோட்டில் இருந்து மும்பைக்கு செல்ல வேண்டிய ரூ.2 கோடி மதிப்புள்ள மஞ்சளும், ரூ.10 கோடி மதிப்புள்ள ஜவுளிகளும், ரூ.2 கோடி மதிப்புள்ள எண்ணெய் மற்றும் முட்டைகளும் அனுப்பமுடியாமல் உள்ளது தே‌ங்‌கி ‌கிட‌‌க்‌கிறது.

இது குறித்து ஈரோடு மாவட்ட சத்தியமங்கலம் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் எஸ்.கே.பொன்னுசாமி கூறுகை‌யி‌ல், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வழியாக தினமும் கர்நாடகா மாநிலத்திற்கு 500க்கு மேற்பட்ட லாரிகள் செல்கிறது. கர்நாடகாவில் வேலை ‌நிறு‌த்த‌ம் ‌‌தீ‌விரமடை‌ந்து‌ள்ளதா‌ல் ரூ.10 கோடி ம‌தி‌ப்‌‌பிலான ஜவுளி பேல்கள், மஞ்சள், எண்ணெய் மற்றும் முட்டைகள் தேங்கியுள்ளன. பெங்களூரூவில் இருந்து வரும் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள மக்காச்சோளம் வரும் வழியிலேயே தேங்கி கிடக்கிறது. கர்நாடகா அரசு விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை சுமூகமாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எ‌ன்றா‌ர் பொ‌ன்னுசா‌‌மி.

Share this Story:

Follow Webdunia tamil