திரிசூலம் மலைப்பகுதியில் இருந்து கல் ஏற்றி வந்த லாரி வளைவு பகுதியில் வேகமாக திரும்பியதால் கட்டுப்பாட்டை இழந்ததில் லாரி ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பலியானார். 2 பேர் படுகாயமடைந்தனர்.
திரிசூலம் மலைப்பகுதியில் உள்ள ஒரு கல் குவாரியில் இருந்து கல் ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்த அந்த லாரியை ஆபத்தான வளைவில் ஒட்டுனர் திரும்ப முயற்சித்தபோது கட்டுப்பாட்டை இழந்தது.
இதில், லாரி ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பலியானார். அதில் பயணம் செய்த 2 சுமை தூக்கும் தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.