திருச்சி, புறநகர் பகுதியான இடமலைபட்டிபுதூர் என்னுமிடத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்தவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
அந்த பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தியாகராசா (எ) ஸ்ரீதர் (41) என்பவர் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிக் கொண்டிருந்த அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் கடந்த 1986ம் ஆண்டு இலங்கையில் இருந்து வந்ததாகவும், அப்போதிலிருந்தே உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் இடமடைபட்டிபுதூரில் இருந்து வருவதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.