சென்னை விமான நிலையத்தில் ரூ.2.5 கோடி மதிப்பிலான 25 கிலோ கிராம் எடையுள்ள 'கெட்டமின் ஹைடிரோ குளோரைடு' என்ற போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை தாய்லாந்து தலைநகர் பாங்காக்கு செல்ல இருந்த பயணி முகமது நசீர் என்பவர் வைத்திருந்த பையை சந்தேகத்தின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, பவுடர் வடிவிலான 'கெட்டமின் ஹைடிரோ குளோரைடு' என்ற போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சர்வதேச மதிப்பில் இதன் விலை ரூ.2.5 கோடி என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அந்த போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அந்த நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.