புதுக்கோட்டை மாவட்டம் கில்லனூர் கிராமத்தில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு வீர விளையாட்டில் காளை குத்தி கிழித்து ஒருவர் பலியானதுடன், 140 பேர் படுகாயமடைந்தனர்.
கில்லனூர் கிராமத்தில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் கொங்காத்திராயன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னராசு (45) என்பர் காளை குத்தி படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், காயமடைந்த 140 பேரும் அருகிலுள்ள கீரனூர், புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.