சென்னை விமான நிலையத்தில் இருந்து போலி கடவுசீட்டு மூலம் பாரிஸ் செல்ல இருந்த ஆஃப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆஃப்கான் நாட்டைச் சேர்ந்த தவுலத் சமியுல்லா (26), காசிப் முகம்மது (19) என்ற அந்த இரண்டு வாலிபர்களும் போலி கடவுச் சீட்டின் மூலம் இலங்கை வழியாக பாரிஸ் செல்ல முயற்சித்த போது குடியேற்ற துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
ஆஃப்கானிஸ்தானில் இருந்து டெல்லி வந்த போது ஆஃப்கானிஸ்தான் கடவுச்சீட்டு உள்ளிட்ட முறையான ஆவணங்களைப் பயன்படுத்திய அவர்கள், டெல்லி வந்ததும் போலி இந்திய கடவுச் சீட்டை வாங்கியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் விசாரணைக்காக மத்திய குற்ற பிரிவு காவல்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டனர்.