கோயம்புத்தூரில் இரவு நேர காவல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு காவலர்கள் மீது 10 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தி ஒரு அறையில் தள்ளி கட்டி வைத்தோடு அவர்களிடமிருந்து துப்பாக்கியையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
நேற்று இரவு பாரதி பூங்கா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அந்த இரண்டு காவல் துறையினரும் அந்த பூங்காவின் ஒரு பகுதியில் தீ எரிவதைப் போன்று ஒளி தெரிவை பார்த்து பூங்கா காவலாளியை அழைத்துள்ளனர்.
அப்போது, அந்த பூங்காவில் மறைந்திருந்த 10 பேர் கொண்ட கும்பல் திடீரென அவர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்கள் கைகளை கட்டியதோடு ஒரு அறையில் தள்ளி விட்டு தப்பி சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, தாக்குதல் நடத்திய அந்த கும்பல் சந்தனமரம் கடத்தும் கும்பலை சேர்ந்வர்களாக இருக்கலாம் என்றும் அல்லது தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும் என்று கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.